தனுஷ், விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது
ADDED : 190 days ago
இட்லி கடை படத்தை முடித்துவிட்டு நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு 'அறுவடை' என தலைப்பு வைத்துள்ளனர். இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் செட் அமைக்கும் பணியின் தாமதத்தால் இதன் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணியை 15 ஏக்கர் நிலத்தில் அமைத்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள்.