உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன?

மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன?

2025ம் வருடத்தில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியான ஒரு நாளாக நேற்றைய மே 9ம் தேதி அமைந்துள்ளது. நேற்று மட்டும் “அம்பி, என் காதலே, கஜானா, கலியுகம், கீனோ, நிழற்குடை, சவுடு, எமன் கட்டளை, யாமன்,” உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இவற்றில் ஒரு சில படங்களில் மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகர்கள், நடிகைகள் நடித்த படங்களாக உள்ளன. 'அம்பி, கஜானா, கலியுகம்' ஆகிய படங்கள்தான் அவை. அவற்றிற்கும் கூட முன்பதிவு என்பது ஒரு வரிசை மட்டுமே நடந்திருக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அவற்றிற்கான தியேட்டர்கள் கிடைத்துள்ளது. மற்ற படங்களுக்கு அதைவிட மோசமாகவே தியேட்டர்கள் கிடைத்துள்ளன.

சிறிய பட்ஜெட் படங்களுக்கான உண்மை நிலை இதுதான். சில படங்களுக்கு அந்த ஒரு வரிசை கூட முன்பதிவு என்பது இல்லை. இப்படியான நிலையை மாற்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று திரையுலகிலேயே சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் கேட்பதில்லை, அவற்றை அமல்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை. இந்நிலை நீடித்தால் சிறிய பட்ஜெட் படங்கள் தயாராவது போகப் போகக் குறைந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !