உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது

பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது

லவ்டுடே, டிராகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு எல்.ஐ.கே, டுயூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். சாய் அபயன்கர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்போது இத்திரைப்படம் இவ்வருட தீபாவளி பண்டிகையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிரதீப்பின் எல்.ஐ.கே., படத்தையும் தீபாவளிக்கு தான் வெளியிட போவதாக பேசி வருகின்றனர். இப்போது இந்த படமும் வெளிவருவதாக அறிவித்துள்ளதால் நிச்சயம் ஒரே நாளில் இரு படமும் வெளியாக வாய்ப்பில்லை. ஏதேனும் ஒரு படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !