கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்!
ADDED : 194 days ago
தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள ‛தக்லைப்' படத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன் அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இருக்கும் தன்னுடைய 237வது படத்தின் நடிக்கப் போகிறார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த நிலையில் இன்றைய தினம் இரட்டையர் அன்பறிவின் பிறந்த நாளையொட்டி ராஜ்கமல் பிலிம்ஸ் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், தொடக்கத்தில் ஒரு ஆக்சன் காட்சி இடம் பெற்று இருக்கிறது. அதையடுத்து அன்பறிவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.