பிளாஷ்பேக் : பூனை கண்ணை மறைக்க லென்ஸ் வைத்து நடித்த சாதனா
1980களில் முன்னணியில் இருந்த மலையாள நடிகை சாதனா. 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள சாதனாவுக்கு சிறப்பான அம்சமே அவரது பூனை கண்தான். மலையாளத்தில் சாரி என்ற பெயரில் நடித்தார்.
ஸ்ரீதர் இயக்கிய 'உன்னை தேடி வருவேன்' என்ற படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சத்தை அளித்தா, அர்த்தமுள்ள ஆசைகள், ஜெயின் ஜெயபால், குளிர்கால மேகங்கள், நானும் ஒரு தொழிலாளி, மை டியர் லிசா, காவலன் அவன் கோவலன், மனைவி ஒரு மாணிக்கம், தொட்டி ஜெயா உள்பட பல படங்களில் நடித்தார்.
அர்த்தமுள்ள உறவுகள், லட்சுமி வந்தாச்சு, கோபுரம், பெண், தென்றல், கண்மணியே உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மலையாள சினிமாக்களில் நடித்த அளவிற்கு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை, இதற்கு காரணம் அவரது பூனைக்கண். மலையாள ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள், மலையாள படங்களில் கவர்ச்சியாகவும் நடித்தார். மலையாள ரசிகர்களுக்கு அவரது கண் மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் அதிகம் நடிக்கவில்லை. தமிழில் நடித்த படங்களில் அனைத்திலுமே அவர் தனது பூனை கண்ணை மறைக்க லென்ஸ் அணிந்து நடித்தார்.