ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம்
ADDED : 186 days ago
சாந்தினி தமிழரசன் நடித்துள்ள புதிய படம் 'பிளாக் ரோஸ்'. இதில் அவருடன் பப்லு பிருத்விராஜ், நிழல்கள் ரவி, நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் நடித்துள்ளனர். இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஏ.எல்.விஜய், ஆர்.மாதேஷ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய எஸ்.ஜே.சரண் எழுதி இயக்கியுள்ளார். படத்துக்கு விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். ஸ்டெபானி ஹட்சன், எஸ்.ஜே.சரண் திரைக்கதை எழுதியுள்ளனர்.
ஆங்கிலப் படங்களின் பாணியிலான கிரைம் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகி உள்ளது. கிளவுட் பிக்சர்ஸ் சார்பில் விஜயலட்சுமி தயாரித்துள்ளார். திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் இந்த படம் விரைவில் முன்னணி ஓடிடி தளம் ஒன்றில் நேரடியாக வெளியாக இருக்கிறது.