உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது

'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது

'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் பிரேக் அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யோகலட்சுமி. தற்போது இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. இந்த நிலையில் இவர் நடித்த 'ஹார்ட் பீட்' சீசன் 2 வெப்சீரிஸ் வருகிற 22ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மருத்துவமனை பின்னணியில் உருவான இந்த வெப் தொடர் மிகவும் பிரபலமானது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !