ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள்
ADDED : 143 days ago
கேம் சேஞ்சர் படத்தை அடுத்து தற்போது புச்சிபாபு சனா இயக்கும் ‛பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் லண்டன் சென்றுள்ள ராம் சரண், மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை பார்வையிட்டார். இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ராம் சரணியின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது அவரை சந்தித்த இங்கிலாந்து ரசிகர்கள் அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட ராமச்சரண் அதில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நாடு திரும்பும் ராம்சரண், பெத்தி படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போகிறார்.