உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கை விடப்பபடுகிறதா இளையராஜா வாழ்க்கை வரலாறு

கை விடப்பபடுகிறதா இளையராஜா வாழ்க்கை வரலாறு

இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்றை அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. என்னது, கேப்டன் மில்லர், சாணிக்காகிதம் போன்ற ரத்தம் சொட்டும் கதைகளை இயக்கிய அருண் மாதேஸ்வரன், இளையராஜா வாழ்க்கை வரலாற்றை எடுக்கப் போகிறாரா? அது செட்டாகுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், தனுஷ் சாய்ஸ் என்பதால் அவரை யாராலும் மாற்ற முடியவில்லை.

அந்த படம் டிராப் என்று செய்திகள் வந்த நிலையில், அது தவறு, தனுஷ் மற்ற படங்களில் பிஸியாக இருக்கிறார். அந்த படம் இந்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனாலும், இப்போது படம் குறித்து எந்த தகவலும் இல்லை. நேற்று தனது 50 ஆண்டு இசைப்பயணத்தை இளையராஜா தொடங்கினார். அந்த நல்ல நாளில் கூட வாழ்க்கை வரலாறு படம் குறித்த அறிவிப்பு, போஸ்டர், டீசர் வெளியீடு இல்லை. ஆகவே, படம் டிராப் ஆகிவிட்டதா? அல்லது வழக்கம்போல் மற்ற படங்களில் தனுஷ் பிஸியாக இருப்பதால் காலதாமதமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் அந்த படம் என்னிடம்தான் வந்தது. ஆனால் சில காரணங்களால் தனுஷை வைத்து என்னால் இயக்க முடியாமல் போனது என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூட இளையராஜா படம் குறித்து சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !