விஜய் ஆண்டனிக்கு மார்கன் கை கொடுக்குமா?
ADDED : 186 days ago
கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்கள் கொடுக்கும் ஹீரோக்களின் பட்டியலில் விஜய் ஆண்டனி இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த பல படங்கள் வருகின்றன. ஆனால், கதையமைப்பு, நட்சத்திர தேர்வு, தவறான வெளியீடு போன்ற பல காரணங்களால் அந்த படம் தோல்வி அடைந்து விடுகின்றன.
2021ல் அவர் நடித்த பிச்சைக்காரன் 2 வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. அடுத்து வந்த கொலை, ரத்தம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில், அவர் நடித்த மார்கன் படம், இந்த மாதம் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படமாவது வெற்றி பெற்று விஜய் ஆண்டனிக்கு உற்சாகத்தை கொடுக்குமா என்பது அவர் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த படம் தவிர, வள்ளிமயில், அக்னி சிறகுகள், சக்திதிருமகன் என சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.