உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன்

சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன்

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படம் நாளை (மே 16) வெளியாக உள்ளது. சூரியின் படங்கள் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருவதால் தமிழ்நாட்டை தாண்டி தற்போது கேரளாவிலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடத்தி உள்ளார்கள். அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமி, சுவாசிகா, படத்தின் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் பலரும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தான். அதனால் இந்த படத்தை கேரளாவில் புரமோட் செய்துள்ளார்கள். இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் உன்னி முகுந்தன் கலந்து கொண்டார்.

கடந்த வருடம் வெளியான கருடன் திரைப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த நட்பின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “இருவருக்கும் கருடன் படத்தில் இணைந்து நடித்தபோது தான் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நான் மார்கோ படத்தில் நடித்து வந்தது பற்றி எதுவும் அவரிடம் சொல்லவில்லை. அந்த படம் தமிழில் ரிலீஸ் ஆன போது அந்த படம் வெற்றி பெற வாழ்த்து கூறி எனக்கு வீடியோ மெசேஜ் அனுப்பினார். அதிலும் என்னுடைய தம்பி உன்னி முகுந்தனின் படம் தமிழில் வெளியாகிறது அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று கூறி இருந்ததை என்னால் இப்போது வரை மறக்க முடியாது. இதுவரை என்னுடைய படங்களுக்கு யாரும் இப்படி இதுபோன்று ஒரு வாழ்த்து சொன்னது இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !