சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா?
உடல்நல பிரச்னை, விவகாரத்துக்குபின் சென்னை பக்கம் அதிகம் வருவது இல்லை சமந்தா. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது சென்னை நண்பர்கள் உதவவில்லை. ஆறுதல் சொல்லவில்லை. அவர் பட வாய்ப்பு இன்றி தவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து யாரும் வாய்ப்பு தரவில்லை. அவரை வைத்து படம் தயாரித்த நிறுவனங்கள், அவரை இயக்கிய இயக்குனர்கள், அவருடன் டூயட் பாடிய ஹீரோக்கள் கூட, அவரை ஒதுக்கிவிட்டார்களாம்.
அந்த வருத்தத்தில் சென்னை பக்கம் அதிகம் வருவது இல்லை என்று கேள்வி. ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டுமே வருகிறார். சென்னை பெண்ணான சமந்தா ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். அதனால்தான், அவர் தயாரித்த சுபம் படத்தை கூட தமிழில் ரிலீஸ் செய்யவில்லை. இப்போதைக்கு சென்னையில் சமந்தாவுக்கு நெருங்கிய தோழி, அவருடன் படித்த விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா மட்டுமே.