மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
140 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
140 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
140 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
140 days ago
மறைந்த நடிகர் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படை தலைவன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‛ரமணா' பட அனுபவங்களை, அதில் நீண்ட புள்ளி விவர டயலாக்கை விஜயகாந்த் எப்படி 2 டேக்கில் ஓகே செய்தார் என்றும், அவர் பெருமைகளையும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
அப்போது சண்முக பாண்டியனை வைத்து ரமணா பார்ட்2வை எடுக்க தயார் என்றார். அது நடக்குமா என்று விசாரித்தால் ரமணா படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அவர் தலைப்பு கொடுத்து, படத்துக்கு ஓகே சொன்னால் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு முருகதாசும் கதையை தயார் செய்ய வேண்டும். தகுந்த தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.
சண்முகபாண்டியன் மாமாவான எல்.கே.சுதீஷ் விஜயகாந்த்தை வைத்து பல படங்களை தயாரித்தார். அவர் ரமணா 2வை தயாரிக்கலாம் என்கிறார்கள். இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி படத்திலும் நடித்து வருகிறார் சண்முக பாண்டியன்.
140 days ago
140 days ago
140 days ago
140 days ago