மூக்குத்தி அம்மன்-2 படத்தில் இரண்டு வேடங்களில் நயன்தாரா!
ADDED : 140 days ago
2020ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பான் இந்தியா படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த மூக்குத்தி அம்மன்-2 படத்தில் நயன்தாரா, அம்மனாக மட்டுமின்றி போலீசாகவும் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஐரா என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்த நயன்தாரா தற்போது இந்த மூக்குத்தி அம்மன்-2 படத்திலும் இரண்டு ரோலில் நடிக்கிறார்.