உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த்

மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த்

'தக் லைப்' படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ஒரு குறுகிய காலத்தில் அளவான பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நவின் பொலிஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் ஒருவரும் நடிக்க போகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது அலைபாயுதே, ஓகே கண்மணி பாணியில் காதல் படமாக உருவாகிறது என்கிறார்கள்.

ருக்மணி வசந்த் தற்போது தமிழில் விஜய் சேதுபதி உடன் ‛ஏஸ்' படத்தில் நடித்து அறிமுகமாகிறார். இதுதரவி முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்திலும் நடிக்கிறார். தெலுங்கிலும் டிராகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !