மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி
ADDED : 139 days ago
சமீபத்தில் வெளியான 'ஜென்டில்வுமன்' படத்தின் மூலம் கவனம் பெற்ற ஜோஷ்வா சேதுராமன் அடுத்து இயக்கும் படம் 'லாயர்'. விஜய் ஆண்டனி தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் தயாரித்து, நடிக்கிறார்.
நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதை உருவாகி உள்ளது. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது.
இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி அதிரடியான ஒரு வழக்கறிஞராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார்.