அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ்
ADDED : 138 days ago
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படுபவர் ஏபிஜே அப்துல் கலாம். நாற்பதாண்டுகளாக விஞ்ஞானியாக இருந்து இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிசெய்தவர்.
இன்றும் இளைஞர்கள் மனதில் ஒளித்து கொண்டிருக்கும் பெயர் அப்துல் கலாம். தற்போது அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க உள்ளனர். ஏ.ஏ. ஆர்ட்ஸ், ஏ.கே. என்டர்டெயின்மென்ட் மற்றும் டி சீரியஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'கலாம் தி மிசெல் மேன் ஆப் இந்தியா' என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் நடிகர் தனுஷ், அப்துல் கலாம் ஆக நடிக்கிறார். இந்த படத்தை ஓம் ராவுத் இயக்குகிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.