வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது?
ADDED : 138 days ago
கடந்த 2022ம் ஆண்டில் ஆண்டரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப்சீரிஸ் 'வதந்தி'. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளனர். சில மாதங்களாக இந்த தொடருக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பிற்கான லோகேசன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வதந்தி 2ம் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கிறார். டூரிஸ்ட் பேமிலி பட புரொமோசனுக்காக இந்த வெப் தொடர் படப்பிடிப்பை தள்ளி வைத்த சசிகுமார் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதன் பெரும்பாலான படப்பிடிப்பை மதுரை மற்றும் திருநெல்வேலியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.