ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா?
ADDED : 248 days ago
மைனா படத்தில் நல்ல போலீசாக நடித்த சேது ஹீரோவாக நடித்துள்ள படம் மையல். இந்த படத்தை பிரபுசாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கி உள்ளார். சம்ரிதிதாரா ஹீரோயின். ஒரு கிராமத்து காதல் கதையாக படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு பிரபல எழுத்தாளரான, பல முன்னணி படங்களில் பணியாற்றிய ஜெயமோகன் கதை வசனம் எழுதியிருக்கிறார். நேற்று வெளியான இந்த படத்துக்கு வெறும் 37 தியேட்டர்கள் மட்டுமே கிடைக்க படக்குழு பெரும் சோகத்தில் இருக்கிறது. முதலில் 75க்கும் அதிகமான தியேட்டர்கள் தருவதாக சொன்னார்கள். கடைசியில் 37 தியேட்டர்தான் கொடுத்து இருக்காங்க. அதிலும் நல்ல காட்சிகள் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆனதால் இந்த நிலை என்று படக்குழுவினர் பொங்குகிறார்கள். தமிழில் முன்னணி எழுத்தாளர் எழுதிய கதைக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டிலும் சலசலப்பு நிலவுகிறது.