23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி
ADDED : 183 days ago
வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அரசியல் கலந்த கதையில் உருவாகும் இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை ரேவதியும் இணைந்திருக்கிறார். இவர் விஜய்யின் அம்மாவாக நடித்து வருகிறாராம். இவர் ஏற்கனவே 2002ம் ஆண்டில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு அக்கா வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்து வருகிறார் ரேவதி.