அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர்
ADDED : 177 days ago
ஆரம்பத்தில் தான் நடிக்கும் கடைசி படத்தில், மற்ற அரசியல்வாதிகளை, 'அட்டாக்' பண்ணும் காட்சியோ, வசனங்களோ இருக்க கூடாது என்று இயக்குனருக்கு உத்தரவு போட்டிருந்தார், தளபதி நடிகர். ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சியை, 'அட்டாக்' பண்ணும் வகையில் சில காட்சிகள் மட்டுமின்றி, 'டயலாக்'குகளையும் இணைக்குமாறு கூறி இருக்கிறார். தானே சீன், டயலாக்கை உருவாக்கியும் கொடுத்துள்ளாராம். அந்த குறிப்பிட்ட சீனில் அவர் பேசும், 'பஞ்ச் டயலாக்' தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என்று அப்படக் குழுவினர் கூறுகின்றனர்.