கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத்
ADDED : 185 days ago
இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க உள்ளனர். ‛ஆதிபுருஷ்' இயக்குனர் ஓம் ராவத் இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஏ. ஆர்ட்ஸ், ஏ.கே. என்டர்டெயின்மென்ட் மற்றும் டி சீரியஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'கலாம் தி மிசெல் மேன் ஆப் இந்தியா' என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் நடிகர் தனுஷ், அப்துல் கலாம் ஆக நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஓம் ராவத் கூறுகையில், ‛‛கலாமின் கதையை திரைக்குக் கொண்டு வருவது கலைச்சவால் மற்றும் தார்மீக, கலாசாரப் பொறுப்பு. இது உலகளாவிய இளைஞர்களுக்கு, குறிப்பாக தென்னகத்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கதை. யாராக இருந்தாலும் அவர்களுக்கான அற்புதமான பாடம், கலாமின் வாழ்க்கை'' எனக் கூறியுள்ளார்.