அந்த போட்டோவை வெளியிடுவேன்: காளி வெங்கட் மிரட்டல்
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட் கதை நாயகனாக நடிக்கும் படம் 'மெட்ராஸ் மேட்னி'. இந்த படம், அப்பா, மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டது. மகளாக பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரி பிரியன் நடிக்கிறார். இந்த பட நிகழ்ச்சியில் காளி வெங்கட் நண்பர்களாக, நடிகர்கள் மெட்ராஸ் கலையரசன், ரமேஷ் திலக் கலந்து கொண்டு, காளி வெங்கட்டை கலாய்த்தனர்.
அடுத்து பேசிய காளிவெங்கட், கலையரசன், ரமேஷ்திலக் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான போட்டோ என்னிடம் இருக்கிறது. அது அதிகாலையில் 4 மணிக்கு எடுக்கப்பட்டது. உரிய காலத்தில் நானே அதை சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன் என்று கிண்டலாக பேசினார். அதிகாலையில் எடுத்த அந்த போட்டோவில் என்ன இருக்கிறது. அந்த ரகசியம் எப்போது வெளிவரும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நடிகர் சத்யராஜ் இதில் எழுத்தாளராக வருகிறார்.