கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன்
ADDED : 144 days ago
கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1 மற்றும் 2, காந்தாரா, சலார் போன்ற பான் படங்களை தயாரித்து, இந்திய அளவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஹோம்பாலே பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சலார் 2, கேஜிஎப் சாப்டர் 1 ஆகிய படங்கள் கையில் உள்ளன.
இந்நிலையில் அடுத்தப்படியாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு படம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்நிறுவனம், ‛பிக் பேங் பிகின்ஸ்' என தெரிவித்துள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். இயக்குனர் யார் என்பதை குறிப்பிடவில்லை. ஏற்கனவே பிரபாஸை வைத்து ஹோம்பாலே நிறுவனம் மூன்று படங்களைக் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.