உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75, மாரடைப்பால் சென்னையில் காலமானார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் மறைவு செய்தி அறிந்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் உடன் அமைச்சர்கள் உதயநிதி, கேஎன் நேரு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டார். அதில், ‛‛தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !