'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா?
ADDED : 138 days ago
மணிரத்னம் இயக்கும் 'தக்லைப்' படத்தில் திரிஷா பாடகியாக வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், அவர் போலீசாகவும் வருகிறாராம். அது சஸ்பென்ஸ் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. தக்லைப் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், போலீஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்தவகையில் கதையை நகர்த்துபவராக திரிஷா இருக்கிறார்.
இதற்கு முன்பு 'பிருந்தா' என்ற வெப்சீரியலில் திரிஷா போலீசாக நடித்து இருக்கிறார். இதில் அதைவிட கனமான வேடம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை சில படங்களில் ஹோம்லியான வேடத்தில் நடித்து வந்த பிரகிடா சாகா, விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தில் போலீசாக நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2ல் அம்மன், போலீஸ் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருவதாக தகவல்.