உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாண் படத்தில் சத்யராஜ் நடித்தது ஏன்?

பவன் கல்யாண் படத்தில் சத்யராஜ் நடித்தது ஏன்?

நடிகர் சத்யராஜ் விரைவில் வெளியாக உள்ள மெட்ராஸ் மேட்னி படத்தில் எழுத்தாளராக வருகிறார். ஹரிஹர வீரமல்லு படத்தில் ஒரு சஸ்பென்ஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இவரைதான் ஹீரோ பவன் கல்யாண் காப்பாற்றுவதாக கதை நகர்கிறதாம். இந்த படங்கள் தவிர, சமீபத்தில் சல்மானின் சிக்கந்தர் படத்தில் வில்லனாக நடித்தார்.

70 வயதை தொட்டுள்ள சத்யராஜ், இன்னும் 3 ஆண்டுகளில் சினிமாவில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். அவர் அறிமுகமான சட்டம் என் கையில் படம், 1978ல் வெளியானது. தனக்கென தனி பாணி, சில கொள்கைகளில் தீவிரமாக இருந்தாலும் சினிமாவில் அதை கவலைப்படுவது இல்லை. தீவிர இந்துத்துவா ஆதரவாளரான பவன்கல்யாணின் ஹரிஹர வீரமல்லுவில் நடித்து இருக்கிறார். இதற்குமுன்பு பிரபாஸ் நடித்த ராதே ஷியாம் படத்தில் ஜோசியராக வந்தார். ஹிந்தியில் சல்மான்கான் படத்தில் வில்லனாக வந்தார்.

''என் நிஜ கொள்கை படி சினிமாவில் நடிப்பேன் என்று அடம்பிடித்தால், ஆண்டுக்கு நாலைந்து படங்கள் கூட கிடைக்காது. சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு. அது நடிப்பு, அதனால், என்னை தேடி வரும் கேரக்டரில் நடிக்கிறேன்'' என்று இதற்கு பதில் சொன்னார் சத்யராஜ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வர, அவர் மறுக்கவில்லை. அந்த படத்தை தம்பி வெற்றிமாறன் போன்றவர்கள் இயக்கினால், மோடியாக நடிக்க ரெடி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !