உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே

தோனி படத்தில் தமிழுக்கு வந்த ராதிகா ஆப்தே, அதன்பிறகு ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது ஹிந்தி, மராத்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும், அந்த படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே . அவர் கூறுகையில், பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு இதுவரை என்னை யாருமே அணுகவில்லை. இப்படி ஒரு செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது என்று பதில் கொடுத்திருக்கிறார் ராதிகா ஆப்தே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !