உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன்

பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன்

நடிகை சம்யுக்தா மேனன் மலையாள படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் டெவில், பீம்லா நாயக், விருபாக்ஷா ஆகிய படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார். தமிழில் தனுஷின் வாத்தி படத்தில் நடித்து இங்குள்ள ரசிகர்களுக்கும் பிரபலமான நடிகையானார்.

தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சம்யுக்தா. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் 'பென்ஸ்'. இதில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதனால் கதாநாயகியாக சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !