உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது

சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது

விஜய்தேவர கொண்டா உடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வந்தார். அதோடு தெலுங்கில் முதன்முதலாக தனது டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் மூலம் சுபம் என்ற படத்தை ரதயாரித்தார். அந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார் சமந்தா. இப்படம் கடந்த மே 9ம் தேதி வெளியானது.

பிரவீன் என்பவர் இயக்கிய இந்த சுபம் படத்தில் ஹர்சித் ரெட்டி, ஹவிரெட்டி ஸ்ரீனிவாஸ், சரண் பெர்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். வருகிற ஜூன் 13ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மா இண்டி பங்காராம் என்ற படத்தை தற்போது தயாரித்து கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !