உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன்

'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன்


கமல்ஹாசன், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக் லைப்' திரைப்படம் ஜூன் 5ல் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிட மாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதனால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் தக் லைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், படத்தை திட்டமிட்டபடி ஜூன் 5ல் வெளியிட அனுமதிக்குமாறும், படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறும் தனது மனுவில் கமல் கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !