சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட்
கடந்த சில வாரங்களாக சினிமா பாடல் வெளியீட்டு விழா, சிறப்பு காட்சிகளில் அரசியல்வாதிகள் பேச்சுகளை அதிகம் கேட்க முடிகிறது. குறிப்பாக, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கர்பச்சான் மகன் நடித்த பேரன்பும் பெருங்கோபமும், விமல் நடித்த பரமசிவன் பாத்திமா போன்ற பாடல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டார். சில படங்களின் சிறப்பு காட்சிகளை பார்த்து பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் புதுமுகங்கள் நடித்த இரவுப் பறவை மற்றும் குயிலி பாடல்கள் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டார். ஷீலா நடித்த வேம்பு, தங்கர்பச்சான் மகன் நடித்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தார்.
பாஜ மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், நாகேஷ் பேரன் பிஜேஷ் நடித்த வானரன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார். அரசியல்வாதிகளை சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைத்து அவர்கள் கருத்தை மீடியாவில் வரவழைப்பது கோலிவுட்டில் இப்போது புது டிரென்ட் ஆக மாறி வருகிறது.