பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ்
ADDED : 144 days ago
என்.டி.ராமராவ் என்றாலே அவர் நடித்த புராண படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் பல படங்களை இயக்கி உள்ளார், பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
'சீத்தாராம கல்யாணம்' என்ற படத்தை முதன் முறையாக 1961ம் ஆண்டு இயக்கினார். அதற்பிறகு 20 படங்கள் வரை இயக்கினார். அவைகள் பெரும்பாலும் புராண மற்றும் சரித்திர கதைகள். 1966ம் ஆண்டு 'ஸ்ரீகிருஷ்ண பாண்டேவியாம்' என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். அதன்பிறகு 19 படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 1967ம் ஆண்டு 'உம்மடி குடும்பம்' என்ற படத்திற்கு கதை எழுதினார். அதை தொடர்ந்து 13 படங்களுக்கு கதை எழுதினார். தமிழில் 'கண்ணன் கருணை' என்ற படத்திற்கும் சிவாஜி நடித்த 'சரித்திர நாயகன்' படத்திற்கு கதை எழுதினார், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார்.