வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே
ADDED : 144 days ago
ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் படம் பெரிய ஹிட். அவர் தெலுங்கில் நடித்த புஷ்பா 2 படம் இன்னும் பெரிய ஹிட். ஆனால், தமிழில் அவர் நடித்த வாரிசு சரியாக போகவில்லை. சுல்தான் ஓகே ரகம். அதனால், தமிழில் பெரிய வெற்றிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இப்போது தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்து வருகிறார். அது சற்றே அழுத்தமான, வேறுவகை கதை.
ராஷ்மிகாவுக்கு கவர்ச்சி ரோல் இல்லை. ஆனாலும், கதைக்காக படம் ஓட வேண்டும் என்று நினைக்கிறாராம். தெலுங்கில் பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சேகர் கம்முலா என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.
இதேபோல் விஜயின் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவும் அந்த படம் பெரிய ஹிட் ஆக வேண்டும். முந்தைய தனது மோசமான சென்டிமென்டை அந்த பட வெற்றி முறியடிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.