உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வில்லன் ஆன ஒளிப்பதிவாளர்

வில்லன் ஆன ஒளிப்பதிவாளர்

சினிமாவில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறவர்களும் நடிகர்களாக மாறி வரும் காலம் இது. இசை அமைப்பாளர்கள், எடிட்டர்கள், நடன இயக்குனர்கள், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர்களும் நடிகர்களாகி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது ஒளிப்பதிவாளர் சுகுமாரும் நடிகராகி விட்டார்.

2006ம் ஆண்டு வெளியான 'கொக்கி' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனவர் சுகுமார். அதன்பிறகு லாடம், மைனா, தடையறத் தாக்க, கும்கி, மான் கராத்தே, காக்கி சட்டை, தர்மதுரை, ஸ்கெட்ச், மாமனிதன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட 50 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை வெளியாக இருக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதோடு அந்த படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்கி உள்ளார். விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். சாயாதேவி நாயகியாக நடித்துள்ளார். எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !