உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீரியல் நடிகை சபானா

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீரியல் நடிகை சபானா

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இருந்த வைஷ்ணவி என்பவர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். அதையடுத்து அவர், விஜய்யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அப்படி அவர் கூறும்போது, நடிகர் விஜய்க்கு காமன் சென்ஸ் இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து சீரியல் நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சபானா, விஜய்க்கு ஆதரவாக வைஷ்ணவியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அவர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சினிமா மட்டுமின்றி பொதுச் சேவை மூலமாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வரக்கூடியவர்தான் விஜய். அவர் சொல்லும் விஷயங்களை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது அல்ல. ஆனால் அவர் குறித்து பேசும் வார்த்தைகளை பார்த்து பேசுங்கள் அவரை பற்றி பேசுவதற்கு முன்பு நீங்கள் உங்களது காமன் சென்சை பயன்படுத்துங்கள்'' என்று அவருக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !