மேலும் செய்திகள்
நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
105 days ago
தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2
105 days ago
மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்ல திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக என்ட்ரி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன். அதையடுத்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, பதிலுக்கு ரவி மோகனும் அவருக்கு அறிக்கை வெளியிட பரபரப்பு நீடித்து வந்தது. பின்னர் நீதிமன்றம் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளக்கூடாது என்று தடை போட்டது. அப்போது தனக்கு ஒரு மாதத்திற்கு 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கை வைத்தது விவாதங்களை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், தற்போது ரவி மோகனும், கெனிஷாவும் குன்றக்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். அப்போது தங்களது கழுத்தில் மாலையுடன் ரவி மோகனும், கெனிஷாவும் கோவில் பூசாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
105 days ago
105 days ago