ராம் இயக்கிய பறந்து போ படத்தின் டீசர் வெளியானது
ADDED : 205 days ago
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு படங்களை இயக்கிய ராம் இயக்கி உள்ள படம் பறந்து போ. சுமோ படத்தை அடுத்து மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கிரேஸ் அந்தோணி, அஞ்சலி, மாஸ்டர் மிதுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
அதில், அப்பா மகனுக்கிடையே உள்ள அன்பான உறவை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பது தெரிகிறது. டீசரில் அப்பாவை பார்த்து மகன், உன்னுடைய சத்தியத்தை யாருமே நம்ப மாட்டார்கள். எல்லா அப்பாக்களுமே பொய்யர்கள் தான். அதனால் அம்மாவை சத்தியம் செய்ய சொல்லு. அப்போதுதான் நான் நம்புவேன் என்று மகன் பேசும் வசனத்துடன் இந்த டீசர் முடிகிறது. ஜூலை 4ல் இந்த படம் வெளியாகிறது.