உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு

டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் மே 1ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'டூரிஸ்ட் பேமிலி'. நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்து வாழ்த்தினர்.

தற்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப், படத்தைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சமீபத்திய காலத்தில் டூரிஸ்ட் பேமிலி மிகச் சிறந்த எழுத்து மற்றும் உருவாக்கம். கதை சொல்லலில் நிச்சயமாக ஒரு மைல்கல். என்னை இருக்கையில் ஒட்ட வைத்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான தருணங்கள், இடம், ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகர்களால் குறையில்லாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அற்புதமான நடிப்பு. இசை மற்றுமொரு சிறந்த சொத்து. எனது நண்பர் அபிஷன் ஜீவிந்த்துக்கு வாழ்த்துக்கள், மற்றும் முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனப் பாராட்டியுள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அபிஷன், “மிக்க நன்றி சார், உங்கள் பாராட்டைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் மிகவும் இனிமையான மனிதர். உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !