அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா
ADDED : 155 days ago
குஷி படத்திற்கு பிறகு வெப்சீரிஸ்களில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் சுபம் என்ற படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, அதையடுத்து பங்காரம் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது அபுதாபியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தான் தங்கி இருந்தபோது, எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில், அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நீராடியபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த பிகினி புகைப்படம் பதினோரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலானது.