வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்!
ADDED : 114 days ago
சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமான வனிதா விஜயகுமார், அதன்பிறகு மாணிக்கம் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து திருமணம், விவாகரத்துக்கு பிறகு சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கிய வனிதா விஜயகுமார், பிரசாந்த் நடித்த 'அந்தகன்' படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகையான தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்த நாளையொட்டி ஜூலை நான்காம் தேதி வெளியிடுகிறார் வனிதா விஜயகுமார். இதையடுத்து தனது மகள் ஜோவிகா மற்றும் படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ள வனிதா விஜயகுமார். அப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.