தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
ADDED : 154 days ago
தெலுங்கில் நடித்த 'ஒடேலா-2' நடத்தில் நாயகியாகவும், ஹிந்தியில் 'ரெய்டு-2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நடிகை தமன்னா. தற்போது 'விவான்' உள்ளிட்ட மூன்று ஹிந்தி படங்களில் கமிட்டாகி உள்ளார் தமன்னா. இதில், 'விவான் போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.
இந்தப் படத்தின் ஒரு போஸ்டரை ஏற்கனவே தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருந்த தமன்னா, இந்த படம் 2026ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திரைக்கு வருவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முதல் இந்த விவான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த தகவலையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.