உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன்

உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன்

மலையாளத்தில் நிமிஷா சஜயனை நடிப்பு அசுரன் என்பார்கள். அவர் நடிப்பும், அவர் நடித்த கேரக்டரும் அப்படி. தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், நாயாட்டு என சொல்லிக் கொண்டே போகலாம். தமிழில் அவர் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , மிஷன் சேப்டர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் டிஎன்ஏ படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

இவர் இயக்கிய ஒரு நாள் கூத்து, பர்ஹானா, மான்ஸ்டர் படங்களில் ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் நிமிஷா கேரக்டரை சுற்றி கதை நகர்கிறதாம். அவர் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார்.

சென்னையில் நடந்த இந்த பட விழாவிலும் ஹீரோவை விட சிறப்பு விருந்தினர்கள் பலரும் நிமிஷாவை புகழ்ந்தனர். படங்களில் ஹோம்லியாக நடிக்கும் நிமிஷா இந்த விழாவுக்கு சற்றே கவர்ச்சியாக வந்து, மலையாளம் கலந்த தமிழில் பேசினார். தனக்கு செட்டில் டயலாக் சொல்லிக் கொடுத்த உதவி இயக்குனர்களுக்கு கூட நன்றி சொன்னார். விழா முடிந்தபின் படம் பார்த்துவிட்டு அனைவரும் என் நடிப்பு பற்றி கருத்து சொல்ல வேண்டும் என அன்பு கட்டளை இட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !