உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர்

நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் 'குபேரா' எனும் படத்தில் நடித்துள்ளார். அவருடன் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப், பாக்யராஜ், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. அடுத்தவாரம் ஜுன் 20ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகிறது. இதுதொடர்பான புரொமோஷன் வேலைகளில் தனுஷ், ராஷ்மிகா உள்ளிட்ட பிரபலங்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே படத்தின் அறிமுக டீசர், தொடர்ந்து படத்தின் டீசர் போன்றவை வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் டிரைலர், நாளை, ஜூன் 13ம் தேதியன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !