உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ்

பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ்


மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. இந்தப் படத்தை இயக்குனர் விபின் தாஸ் இயக்கியிருந்தார். சின்ன பட்ஜெட்டில் ஓரளவு அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் சொல்லப்பட்ட விஷயத்திற்காகவும் அது கையாளப்பட்டிருந்த விதமும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. மிகப்பெரிய வசூலும் செய்தது. பாலிவுட் நடிகர் அமீர்கான் கூட இயக்குனர் விபின் தாஸை நேரில் அழைத்து பாராட்டியதுடன் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் சில முயற்சிகள் எடுத்தார்.

இந்த படத்தை அடுத்து பிரித்விராஜ் நடிப்பில் 'குருவாயூர் அம்பல நடையில்' என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் பிரித்விராஜை வைத்து 'சந்தோஷ் டிராபி' என்கிற படத்தை இயக்க இருக்கிறார் விபின் தாஸ். ஆனால் இதற்கு இடையில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, இவர் இயக்க இருந்த இரண்டு படங்கள் டிராப் ஆனது. அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விபின் தாஸ்.

நடிகர் பஹத் பாசில், எஸ்.ஜே சூர்யா இருவரும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கியதாகவும் இருவருக்கும் கதை பிடித்தாலும் கூட கால்ஷீட் மற்றும் பட்ஜெட் பிரச்னை காரணமாக அந்த படம் டிராப் ஆனது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல மோகன்லாலுக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் நான் சொன்ன கதை மோகன்லாலை ஈர்க்கவில்லை என்பதால் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும் கைநழுவிப் போனதாக கூறியுள்ளார் விபின் தாஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !