நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை
ADDED : 110 days ago
உலக நடிகருடன் நடித்திருக்கும் படத்தில், தன் திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரத்தை கொடுத்தாலும், வாங்கிய வேலைக்கு ஏற்ற படக்கூலியை கொடுக்கவில்லை என, புலம்பி கொண்டிருக்கிறார், மூனுஷா நடிகை.
மேற்படி உலக நடிகரே இந்த படத்தை தயாரித்ததால், பாதியாக படக்கூலியை குறைத்து, தன் தலையில் மிளகாய் அரைத்து விட்டதாக கூறும் நடிகை, 'இனிவரும் காலங்களில் நட்பு வட்டார நடிகர்கள் தயாரிக்கும் படங்களில் எக்காரணம் கொண்டும் நடிக்க மாட்டேன்...' என்கிறார்.