உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி?

மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி?


‛தக்லைப்' பட தோல்வியால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் மணிரத்னம் என்று ஒரு தரப்பு கதை விடுகிறது. இது உண்மையா என்று விசாரித்தால், ''கூலி, ஜெயிலர் 2 படங்களில் ரஜினி பிஸியாக இருக்கிறார். அடுத்த படம் குறித்து முடிவெடுக்கவில்லை. ரஜினியும், மணிரத்னமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். சிலமுறை இணைய நினைத்தார்கள் நடக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு கேரக்டரில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அதுவும் கை கூடவில்லை.

இந்நிலையில், கமல், ரஜினி இணையும் படத்தை மணிரத்னம் இயக்குவதாக பேசப்பட்டது. அந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் என்று பேச்சு எழுந்தது. ஆனால், பின்னர் அது பற்றி யாரும் பேசவில்லை. இந்த சூழ்நிலையில் தக்லைப் வந்தது. இந்த படத்தின் தோல்வியால் மணிரத்னம் மார்க்கெட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் ரஜினியை வைத்து இயக்க நினைத்தால், சரியான கதை அமைந்தால் அது நடக்கும். ரஜினியும் மணிரத்னத்தை பெரிதாக மதிக்கிறார். தளபதிக்குபின் இணையும் படம் பெரிதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். மற்றபடி, தக்லைப் பற்றி வதந்திகள் வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. மணிரத்னம் கால்ஷீட் கேட்டால் ரஜினி மறுக்கமாட்டார்'' என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !