மார்கோ 2 கைவிடப்பட்டது : உன்னி முகுந்தன்
ADDED : 147 days ago
ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்து கடந்தாண்டில் வெளியான மலையாளப் படம் 'மார்க்கோ'. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பலரும் விமர்சித்தனர். ஆனாலும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
மார்கோ இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மார்கோ இரண்டாம் பாகம் குறித்து உன்னி முகுந்தனுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், ‛‛மார்கோ 2ம் பாகம் உருவாகவில்லை. அந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் ஆன சூழல் நிலவியதால் இந்த படத்தை கை விடுகிறோம். ஆனால், மார்கோ 2 படத்தை விட வேறொரு சிறந்த படத்தை கொடுக்க விரும்புகிறேன். அது பெரிய படமாக, நல்ல படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.