ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு
ADDED : 262 days ago
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படம் 'ஜனநாயகன்'. அரசியலுக்கு செல்வதால் இது தான் தனது கடைசிப்படம் என அறிவித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார். இதை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அரசியல் கலந்த அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சம்மந்தப்பட்ட படக்காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது நாயகி பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.