உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா

45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும் சூர்யா

ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள தனது 45 வது படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்திற்கு வேட்டை கருப்பு என்று தலைப்பு வைக்க திட்டமிட்டு இருந்த ஆர்.ஜே .பாலாஜி தற்போது கருப்பு என டைட்டில் வைக்க முடிவெடுத்து இருக்கிறார். ஜூன் 20ஆம் தேதி அவரது பிறந்த நாளில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது . அதோடு ஜூன் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த கருப்பு படத்தின் டீசர் வெளியாகிறது. மேலும் இந்த கருப்பு படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ஒரு வேடத்தில் சாதாரண மனிதராகவும், இன்னொரு வேடத்தில் கடவுளாகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக இந்த கடவுள் வேடம்தான் வழக்கறிஞராக உருவெடுத்து நீதியை நிலைநாட்ட வாதாடுவது போன்று படமாக்கப்பட்டிருப்பதாக அப்பட வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !